வணக்கம்,
கல்லூரி என்னும் தலைப்பில் சங்கமம் நடத்திய போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. இந்தப் போட்டியிற்கு நடுவர்களாக பொறுப்பேற்ற வினையூக்கி மற்றும் பரிசல்காரன் ஆகிய இருவருக்கும் சங்கமம் சார்பாக நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறோம். முதல் கட்டத் தேர்வில் அதிக வாக்குகள் மற்றும் சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில் 10 போட்டியாளர்கள் இரண்டாவது கட்டத்துக்கு தேர்வானார்கள். இரண்டாவது கட்டத்தில் நடுவர்களின் மதிப்பீடு 50 சதவீதமாகவும், மக்களின் வாக்குகள் 50 சதவீதமாகவும் அமைப்பட்டது. அதன்படியே தேர்வானவர்களின் பட்டியல் கீழே.


முதல் இடம் மற்றும் Oviam Hosting நிறுவனத்தார் வழங்கும் பரிசு- ”வெட்டிப்பயல்” பாலாஜி
இரண்டாம் இடம்- சத்யராஜ் குமார்
மூன்றாம் இடம்- ”பினாத்தல்” சுரேஷ்


 

இடம் தலைப்பு/பதிவர் நடுவர்-1 நடுவர்-2 மக்கள் முடிவு
1 கல்லூரிப் பயணம் : வெட்டிப்பயல் 10 7.5 7.36 80.55
2 கல்லறை ஆட்டம் : சத்யராஜ்குமார் 9.5 6.5 8 80
3 நாற்பது மாத்திரைகள் : பினாத்தல் சுரேஷ் 9 7 6.96 74.8
4 கமிஷன் மண்டி சுப்பையா : ஸ்ரீதர் நாராயணன் 7.5 7 7.28 72.65
5 யார் முட்டாள்? : என். சொக்கன் 7 6.5 7.4 70.75
6 கல்லூரி..கள் ஊறும் நினைவுகள் : நர்சிம் 6 7.5 7.02 68.85
7 மாணவர்களுக்கு எச்சரிக்கை : நசரேயன் 6 6.5 7.2 67.25
8 சொல்லாத-காதல்-எல்லாம் : Sundari 6 6.5 7.08 66.65
9 வாசமில்லா மயிலிறகுகள் : ராமசந்திரன் உஷா 8 5 6.46 64.8
10 ஒரு தாயின் கல்லூரிக் கனவு : புன்னகை 4 6 7.18 60.9

அடுத்தப் போட்டியினைப் பற்றிய அறிவிப்பு வரும் திங்கட்கிழமை அன்று எதிர்பாருங்கள்!

 

 

போட்டிக்கான இடுகைகள்:
1.   கல்லூரி நாட்கள் : நாமக்கல் சிபி
2.   கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது? : sureஷ்
3.   ஏன் இந்த‌ மாற்ற‌ம் என்னுள்ளே;-) : Iyarkai
4.   நான் அவன் காதல் : தமிழரசி
5.   அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! நண்பனே! : சந்துரு
6.   மாணவர்களுக்கு எச்சரிக்கை : நசரேயன்
7.   பொறியியல் முதல் வருடம் வகுப்பின் முதல் நாள் : Dhans
8.   ஈயும் ஏரோப்ளேனும் : லதானந்த்
9.   கல்லூரி- சங்கமம் போட்டிக்காக : m.palaniappan
10.   கல்லூரி இறுதி நாள் : ஷீ-நிசி
11.   தொடர்பு கதைகள்(நம்ம ஊரு Babel)-சங்கமம் போட்டிக்காக : வினோத் கெளதம்
12.   உன்னில் விழுந்தேன் என்னை இழந்தேன்!‍-சங்கமம் போட்டிக்காக‌ : தணிகாஷ் (மாணிக்கப்போடி இளையதம்பி)
13.   ஏன் பிரிந்து சென்றாய் நண்பா...?(கல்லூரி- சங்கமம் போட்டிக்காக) : kishore
14.   நாற்பது மாத்திரைகள் (சங்கமம் போட்டிக்கதை) : பினாத்தல் சுரேஷ்
15.   கல்லூரி..கள் ஊறும் நினைவுகள் : நர்சிம்
16.   புட்டிக்கதை : கார்க்கி
17.   யார் முட்டாள்? : என். சொக்கன்
18.   கல்லறை ஆட்டம் : சத்யராஜ்குமார்
19.   நானும் காலேஜுக்கு போறேன்.. (சங்கமம் கல்லூரி போட்டிக்காக) : லோகு
20.   இளமை வெகு இனிது : ராமலக்ஷ்மி
21.   கல்லூரி - முதல் நாள் : மணிகண்டன்
22.   கல்லூரிப் பயணம் : வெட்டிப்பயல்
23.   வாசமில்லா மயிலிறகுகள் : ராமசந்திரன் உஷா
24.   ஒரு தாயின் கல்லூரிக் கனவு : புன்னகை
25.   சொல்லாத-காதல்-எல்லாம் : Sundari
26.   காதல் என்பது... : கெக்கெ பிக்குணி
27.   கமிஷன் மண்டி சுப்பையா : ஸ்ரீதர் நாராயணன்
விவரம்:

      வாழ்க்கை என்னும் இயந்திரத்தில் பின்னோக்கி நகர வழி ஒன்று இருந்தால் அனைவரும் திரும்பப் போக விரும்பும் காலகட்டம் கல்லூரிக்காலம். வாழ்க்கைக்குத் தேவையான ஏட்டுக் கல்வியை மட்டுமில்லாமல், அனுபவக் கல்வியையும் பயிற்றுவிக்கும் இடம் கல்லூரி. அடுத்து வாழப்போகும் வாழ்க்கைக்கு தேவையானப் பாடங்களை நமக்கு சொல்லித் தருமிடம்தான் கல்லூரி.

      ல்லூரி என்றதும் பெரும்பாலோனோர்க்கு நினைவுக்கு வருவது நண்பர்களும், காதலும்.. காதலித்தவரை கைப்பிடித்தவர்களுக்கு அதை நிறைவேற்ற உதவிய நண்பர்கள் மேல் கோபம் வரலாம். நண்பர்கள் செய்த தியாகம், துரோகம், அதனால் இன்று இருக்கும் நிலைமை, அவர்கள் மூலம் நாம் கற்ற வாழ்க்கை பாடம் எல்லாம் கண் முன்னே தோன்றலாம்.

      ல்லூரியில் நிகழ்ந்த விழாக்கள், கொண்டாட்டங்கள், விடுதி விளையாட்டுக்கள், கும்மாளங்கள், சுவர் ஏறிக் குதித்து கண்டத் திரைப்படங்கள், மூத்தோர் - இளையோர் சண்டை இவையெல்லாம் நினைக்கையில் அதன் இன்பமே தனி. இதைத் தாண்டாமல் வந்தவர்கள் நம்மில் சொற்பமே. நம்மில் பெரும்பாலானோர் கல்லூரித் தினங்களை கடந்தே வந்திருப்போம், ஆனாலும் இன்னும் பலர், கல்லூரியில் படிக்க இயலாமல் போன சோகத்தை ஏதாவது கல்லூரி ஒன்றைக்கடக்கையில் அவர்கள் விடும் பெருமூச்சில் அருகில இருந்து உணர்ந்திருப்போம்.

      ட்பு, காதல் என்று வாழ்க்கையையே தொலைத்த பலரையும் நாம் கல்லூரியில் பார்த்திருப்போம். நட்புக்காகவும், காதலுக்காகவும் புகை, மது என அடிமையாவதும் இந்தக் காலத்தில்தான். எதிலும் கலக்காமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி பிறகு வருந்துபவர்களும் உண்டு, மகிழ்பவர்களும் உண்டு. ஒவ்வொருவருடைய கல்லூரி அனுபவங்களை படிக்கும் போது நாமும் அவர்களுடன் கால இயந்திரத்தில் பயணித்து நமது கல்லூரிக்கேச் செல்கின்றோம். கல்லூரியின் அரசியல் குணங்களும் நாமறிந்த ஒன்றுதான்.

      ப்படிப் பல நிறங்களையும், கலாச்சாரங்களையும், நிகழ்வுகளையும் கொண்ட 'கல்லூரி'யே இந்தப் போட்டிக்கான தலைப்பு. இந்தத் தலைப்பினை அடித்தளமாக அமையும் கதை, கவிதை, சொந்த அனுபவங்கள், கட்டுரைகள், படங்கள், குறும்படங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
 

  • சமர்பிக்கப்படும் இடுகையானது உங்கள் படைப்பாக இருத்தல் வேண்டும். 
  •  ஒருவர் ஒரு படைப்பினை மட்டுமே அனுப்பலாம்.
  • போட்டிக்கான இடுகையானது 2-மார்ச்-2009  தேதிக்கு பின்னர் எழுதப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
  • வாக்கெடுப்பின் மூலமும், நடுவர்கள் மூலமும் முடிவுகள் தேர்ந்தெடுக்கப்படும்.
  • போட்டிக்கான இடுகைகள் தணிக்கை செய்யப்பட்ட பிறகே வாக்கெடுப்பிற்கு வைக்கப்படும்.
  • சிறந்த முதல் 3 படைப்புகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

பரிசு:   முதல் பரிசு பெறும் படைப்புக்கு Oviam Hosting நிறுவனத்தார் வழங்கும் ஒரு வருடத்துக்கான தனி இணையச் சேவை (Domain Name & Web hosting for a Year) அல்லது ரூ. 1,250/- மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்படும். (கிழக்குப் பதிப்பகம் அல்லது எனி இந்தியன்).

நடுவர்கள்:   நாம் நன்கறிந்த இரு பதிவர்களே நடுவர்களாக பணியாற்ற சம்மதித்திருக்கிறார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் பெயர்கள் வாக்கெடுப்புக்கு பின்னர் அறிவிக்கப்படும்.

வாக்கெடுப்பு:  25-மார்ச்-2009 இருந்து ஏப்ரல்-5-2009 வரை22-மார்ச்-2009 இருந்து 27-மார்ச்-2009 வரை
முடிவுகள்:  ஏப்ரல்-9-2009